முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.ஆர். தொகை செலவு குறித்து தெளிவாக விளக்க வேண்டும் - பெரு நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

புதன்கிழமை, 31 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பெரு நிறுவனங்கள், லாபத்தில் 2 சதவீதத்தை சமூக பொறுப்புடைமை சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் பெரும்பாலான பெரு நிறுவனங்கள் இதை துஷ்பிரயோகம் செய்கின்றன. பினாமி அறக்கட்டளைகளை உருவாக்கி அவற்றின் வாயிலாக பணத்தை செலவு செய்கின்றன. இதனால் ஆதாயம் பெறுபவர்கள் இந்த பெரு நிறுவனங்களை சேர்ந்தவர்களும், அவர்களது சுற்றத்தினரும் தான். இந்த மோசடி குறித்து அரசுக்கு புகார்கள் வந்து குவிந்துள்ளன.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

சி.எஸ்.ஆர். தொகையை எங்கே செலவு செய்துள்ளோம். எவ்வாறு செலவு செய்துள்ளோம் என்பதை பெரு நிறுவனங்கள் தெளிவாக விளக்க வேண்டும். இதற்காக 3 ஆண்டு அவகாசம் அளிக்கப்படுகிறது. இதன் பிறகு சி.எஸ்.ஆர். தொகையை உரிய முறையில் செலவு செய்யாவிட்டால் அதை எஸ்க்ரோ அக்கவுண்டில் செலுத்த வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எஸ்க்ரோ அக்கவுண்ட் என்பது எதற்காக பணத்தை செலவிட வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதற்காக செயல்படுத்தப்படும் வங்கி கணக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து