முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நின்ற திருக்கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

காஞ்சிபுரம் : காஞ்சி அத்தி வரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து காட்சியளிக்கிறார். நீல நிற பட்டு உடுத்தி அருள் பாலிக்கும் அத்திவரதரை, நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் அத்தி வரதர் வைபவம் நடைபெறுகிறது. இதில் நேற்று முன்தினம் (ஜூலை 31) வரை சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர் நேற்று முதல் வரும் 17-ம் தேதி வரை நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். சயன கோலத்தில் அத்தி வரதரை தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி ஆகியோர் தரிசனம் செய்தனர். இதுவரை 47 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.

நின்ற கோல அத்தி வரதரை தரிசிக்க அதிக பக்தர்கள் வருவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. பொது தரிசன வரிசையில் கூட்டம் அதிகம் இருந்தால் அவர்களை நிறுத்தி தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்ப வடக்கு மாட வீதியில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 10 ஆயிரம் பேர் தங்கலாம் எனவும் கூறியுள்ளது. இந்நிலையில், நேற்று நின்ற கோலத்தில் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும், நின்ற திருக்கோலத்தில் அத்தி வரதரை காண காஞ்சியில் குவிந்துள்ளனர். கிழக்கு கோபுர வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து