முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கங்குலி ஆர்வம்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற விருப்பத்தை சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பணிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துடன் முடிகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் இருந்து கவனிக்கத்தக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் பேசிய கங்குலி, நானும் ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராவதற்கான லட்சியங்களை வளர்த்து கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கங்குலி பேசுகையில், நிச்சயமாக, பயிற்சியாளராக எனக்கும் ஆர்வமுள்ளது. இருப்பினும் இந்த காலக்கட்டத்தில் இல்லை. இன்னும் ஒரு கட்டம் போகட்டும் அப்போது பயிற்சியாளர் களத்தில் என்னுடைய பெயரையும் இடம்பெற செய்வேன். இப்போது பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுள்ளேன். ஐ.பி.எல், சி.ஏ.பி, தொலைக்காட்சி வர்ணனை என மேற்கொள்ளும் பணிகளை முதலில் நிறைவு செய்கிறேன். ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் இந்தியப் பயி்ற்சியாளராவேன். நிச்சயமாக எனக்கு ஆர்வம் உள்ளது. எதிர்காலத்தில் ஆக வேண்டும் என்பதில் நாட்டம் உள்ளது.

இப்போது தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களில் பெரிய பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. இப்போதைய தேர்வுக்கு ஜெயவர்தனே விண்ணப்பிப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அது தென்படவில்லை. தேர்வுக்குழு என்ன முடிவெடுக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. சாஸ்திரி பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? என்பது பற்றி என் கருத்தை நான் இப்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன். அது குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. பயிற்சியாளரைத் தீர்மானிக்கும் அமைப்பு முறையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறேன். இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவாகவே உள்ளது. இந்தியாவிற்கு சவாலான அளவிலே போட்டிகள் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து