முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் சிறப்பு கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 2,217 கோடி

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ரயில் சிறப்பு கட்டணம் மூலம் ரூ. 2,217 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் சிறப்பு கட்டணம் மூலம் 2 ஆண்டுகளில் 20 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியால் தெரிய வந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, ராஜதானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் பிளக்சி பேர் என்ற பெயரில் சிறப்பு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில்களில், முதல் 10 சதவீத படுக்கைகள் வழக்கமான கட்டணத்திலும், அடுத்து ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகளுக்கும் 10 சதவீதம் கட்டணம் அதிகரித்தபடியும் இருக்கும். அதிகபட்சமாக 50 சதவீதம்வரை கட்டண உயர்வு இருக்கும். மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 452 ரயில்களில் வெறும் 141 ரயில்களில் மட்டும் இந்த சிறப்பு கட்டணம் தற்போது அமலில் உள்ளது. அதிலும், ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, ஏ.சி. இருக்கை வசதி, தூங்கும் வசதி, இரண்டாம் வகுப்பு முன்பதிவு ஆகிய பெட்டிகளுக்கு மட்டும் சிறப்பு கட்டண முறை பொருந்தும்.

இந்நிலையில், சிறப்பு கட்டணத்தால் கிடைத்த வருவாயை தெரிவிக்குமாறு மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, ரயில்வே அமைச்சகத்திடம் கேள்வி கேட்டார். அதற்கு ரயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2017 - 2018, 2018 - 2019 ஆகிய 2 நிதி ஆண்டுகளில், ரயில் டிக்கெட் விற்பனை மூலம் ரயில்வேக்கு ரூ.10 ஆயிரத்து 72 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதில், சிறப்பு கட்டணம் மூலம் மட்டும் ரூ. 2 ஆயிரத்து 217 கோடி கிடைத்துள்ளது. இது மொத்த வருவாயில் சுமார் 20 சதவீதத்துக்கு மேல் ஆகும். சிறப்பு கட்டணத்தால்தான் 20 சதவீத கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. அதாவது, 2017- 2018 நிதியாண்டில், சிறப்பு கட்டணம் மூலம் ரூ. 1,063 கோடியும், 2018 - 2019 நிதியாண்டில் சிறப்பு கட்டணத்தால் ரூ.1,153 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணம் மூலம் கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதால், அதை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் சமீபத்தில் மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து