எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூர் : கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் எடியூரப்பாவுடன் விமானத்தில் சென்று பார்வையிட்டார்.
மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மேலாற்றுப்படுகை பகுதியில், தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கோலாப்பூர், சாங்லி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கனமழை காரணமாக 2 ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு சாலைகள், மேம்பாலங்கள், தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மகராஷ்ராவில் கிருஷ்ணா ஆறு கரைபுரண்டு ஓடுவதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அல்மாட்டி அணை நிரம்பியுள்ளதால தண்ணீர் முழுவதும் கிருஷ்ணா மேல்படுகையில் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளத்தை தடுக்க அல்மாட்டி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவின் கிருஷ்ணா கீழ் படுகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக கர்நாடகா சென்றார். வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் எடியூரப்பாவுடன் விமானத்தில் சென்று அவர் பார்வையிட்டார். அவருடன் அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் உடன் சென்றனர். வெள்ளம் பாதித்த இடங்களை அமித்ஷாவுக்கு, எடியூரப்பா விளக்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025