ஆசிய கைப்பந்து போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
SPORTS-2 2019 08 11

Source: provided

மியான்மரில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஆண்களுக்கான 3-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (23 வயதுக்குட்பட்டோர்) மியான்மரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 21-25, 25-16, 25-22, 25-18 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்று இருக்கிறது. இந்திய அணி இறுதி ஆட்டத்தில் சீன-தைபேயை சந்திக்கிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து