இலங்கையில் எசலா பெரஹரா திருவிழா - வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      உலகம்
Esala Perahera Festival 2019 08 13

கொழும்பு : இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் விழாவான எசலா பெரஹரா விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் கண்டியில் உள்ள புத்தரின் பாதுகாக்கப்பட்ட புனிதப் பல்லுடன் யானைகள் குடை சூழ ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இது இலங்கையில் வருடந்தோறும் நடைபெற்று வரும் பாரம்பரிய மிக்க புத்த சமய திருவிழாவாகும்.

இவ்விழா எசலா பெரஹரா விழா என்று அழைக்கப்படுகிறது. விழாவின் முக்கியமான அம்சமாக யானைகள் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. புத்தரின் புனித பல் அடங்கிய கலசத்தில் அலங்கரித்து யானை மீது ஏற்றி வாத்தியங்கள் முழங்க ஊர்வலகமாக கொண்டு செல்லப்பட்டது. கண்டி நகரில் உள்ள தலதா மாளிகையில் இருந்து 50 யானைகள் குடை சூழ தொடங்கிய ஊர்வலம், ஆடல் பாடலுடன் முக்கிய விதிகள் வழியே பயணித்தது. ஊர்வலத்தில் 2,000 கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நடனங்கள் ஆடிய படி சென்றது காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

ஈஸ்டர் தின குண்டு வெடிப்பை கருத்தில் கொண்டு இவ்விழாவிற்கு வழக்கத்தை விட கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த  5-ம் தேதி தொடங்கிய எசலா பெரஹரா விழா வருகின்ற 15-ம் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து