முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடற்கல்வி ஆசிரியர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

உடற்கல்வி ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழகத்தில் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து தான் இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். மாணவர்கள் பள்ளிகளுக்கு இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தால் அனுமதிக்க கூடாது. பள்ளி நேரம் முடிந்த பின், மாணவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து 15 நிமிட இடைவெளியில் வெளியே அனுப்ப வேண்டும். உடற்பயிற்சி ஆசிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் மாணவர்களை ஒழுங்குப்படுத்தி அனுப்ப வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளிடையே சாலைப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து