முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்கள் யாரும் இல்லாமல் நான்கு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய கர்நாடக முதல்வர் எடியூரப்பா!

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று மூன்று வாரங்கள் ஆகியும், தற்போது வரை கர்நாடக அமைச்சரவை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது கர்நாடக அரசியல் சூழலில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் இடம்பெறாமலே, முதல்வரின் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை கர்நாடகாவில் நான்கு அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த கூட்டங்களில் முதல்வர், தலைமை செயலர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். ஆனால், கர்நாடக அமைச்சரவையில் யார், யாருக்கு இடமளிப்பது என்பது குறித்து முடிவெடுக்கவே கடந்த  6-ம் தேதி முதல்வர் எடியூரப்பா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். கர்நாடக அமைச்சரவை குறித்த ஆலோசனையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், முடிவு ஏதும் எட்டப்படவில்லை. அந்த சமயத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்ததால், எடியூரப்பா அமித்ஷாவை சந்தித்து பேச முடியவில்லை.

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியமைத்து தற்போது ஒரு மாதம் முடியவடையவுள்ள நிலையில், அமைச்சரவையில் தனி ஒருவராக எடியூரப்பா கோலோச்சி வருகிறார். இதையடுத்து, அடுத்த இரண்டு நாட்கள் எடியூரப்பா டெல்லியில் முகாமிட்டு கர்நாடக அமைச்சரவை குறித்து விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது காஷ்மீர் விவகாரம் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் கர்நாடக அமைச்சரவை குறித்து பா.ஜ.க. தலைமையகம் ஒரு சில நாட்களில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து