காலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
timut Karunaratne 2019 08 18

காலே : காலே டெஸ்ட் இலங்கை அணி வெற்றி பெற்றது. திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ராஸ் டெய்லரின் (86) சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 149 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, குசால் மெண்டிஸ் (53), மேத்யூஸ் (50), டிக்வெல்லா (61) ஆகியோரின் அரைசதங்களால் 267 ரன்களில் ஆல் அவுட்டானது. 18 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. விக்கெட் கீப்பர் வாட்லிங் சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார். அவர் 77 ரன்களில் அவுட்டானார். டாம் லாதமின் 45 ரன்களும், சாமர்வில்லியின் 40 ரன்களும் நியூசிலாந்து அணியின் ஸ்கோரை 285 ரன்கள் எடுக்க உதவியது. இலங்கை அணி சார்பில் லசித் எம்பல்டெனியா 4 விக்கெட்டும், தனஞ்செயா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் திமுத் கருணரத்னேவும், லஹிரு திரிமன்னேவும் இறங்கினர். இருவரும் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தனர். 4-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 71 ரன்னுடனும், திரிமன்னே 57 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில் கடைசி நாளான இன்று, திரிமன்னே 64 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 10 ரன்னில் வெளியேறினார். திரிமன்னே விக்கெட்டை வீழ்த்திய நியூசிலாந்து அணிவீரர்கள் திரிமன்னே விக்கெட்டை வீழ்த்தியநியூசிலாந்துஅணிவீரர்கள்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய திமுத் கருணரத்னே சதமடித்து அசத்தினார். அவர் 122 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். முடிவில், இலங்கை அணி 86.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது திமுத் கருணரத்னேவுக்கு வழங்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ஆகஸ்டு 22ம் தேதி கொழும்புவில் தொடங்குகிறது

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து