எம்.எஸ்.டோனிக்கான சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த்: சேவாக் சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Sehwag 2019 04 14

Source: provided

மும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்எஸ் டோனிக்கு சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த் என்று சேவாக் சொல்கிறார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்த எம்எஸ் டோனி கடந்த 2014-ல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவருக்கு மாற்று வீரரை தேடும் பணிக்கு டோனி வழிவிட்டது கிடையாது. இந்நிலையில்தான் உலகக்கோப்பை தொடருக்குப் பின் இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்துள்ளார். இதனால் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் டோனிக்கு ரிஷப் பந்துதான் சரியான மாற்று வீரர் என சேவாக் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து சேவாக் கூறுகையில்,  டோனிக்கான சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த்-ஆக இருப்பார் என நான் நினைக்கிறேன். டெஸ்ட் போட்டியில் அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார். தற்போது மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவரது திறமையை நிரூபிக்கலாம். அவர் சிறிது காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது ஷாட் செலக்சனை சரி செய்து விட்டால், இந்திய அணியில் நீண்ட காலமாக விளையாடுவார்.

இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களில் அவரை தொடக்க பேட்ஸ்மேனாக பார்க்கலாம். 50 ஓவர் மற்றும் டி20 ஓவர் போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கக்கூடிய திறமை அவரிடம் உள்ளது’’ என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து