உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
SPORTS-4 2018 08 23

Source: provided

பாலில் : உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் பிவி சிந்து.

உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. ஒரு காலிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து சீன தைபேயின் தாய் ஜூ யிங்-கை எதிர்கொண்டார். முதல் செட் பிவி சிந்துவுக்கு சிறப்பாக அமையவில்லை. ஜூ யிங் 21-12 என எளிதாக கைப்பற்றினார்.

ஆனால் 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜூ யிங்கும் பதிலடி கொடுக்க, ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் பி.வி. சிந்து 23-21 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டும் பரபரப்பாகவே சென்றது.

இறுதியில் பி.வி.சிந்து 21-19 எனக் 3-வது செட்டை கைப்பற்றினார். இதனால் 12-21, 23-21, 21-19 என பிவி சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பி.வி. சிந்து.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து