முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

அபுதாபி : பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது வழங்கப்பட்டது.

பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா - பிரான்ஸ் இடையேயான நட்புறவு, ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி ஐக்கிய அமீரகத்திற்கு சென்றார். அபுதாபி சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள், சர்வதேச நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அபுதாபி பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி பக்ரைன் செல்ல உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து