கர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      உலகம்
pregnant women smoking 2019 08 25

துபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், நவநாகரீகம் என்ற பெயரில், சில பெண்கள் புகைப்பிடிப்பது, மது அருந்துதல், போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் போன்றவற்றை சர்வசாதாரணமாக மேற்கொள்கின்றனர். இது போன்ற பெண்களுக்கு பிறக்கும் குழந்தை ஓரினச் சேர்கையாளராக அல்லது திருநங்கையாக உருவாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வை நடத்திய நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக நியூரோபயாலஜி பேராசிரியர் டிக் ஸ்வாப் வெளியிட்டுள்ள‌ ஆய்வில் கூறுகையில், கர்ப்பிணி பெண்கள் சிகரெட் புகைப்பது, போதைப் பொருள் உட்கொள்வது போன்ற செயல்கள் ஓரினச்சேர்க்கையாளராக மாறும் ஒரு குழந்தையைப் பெறுவதற்கான வாய்ப்பை உயர்த்தக் கூடும். அதே போன்று மன அழுத்தமும் இத்தகைய சூழலை உருவாக்கும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து இது பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். புகைப்பது பிறக்கவுள்ள குழந்தையின் பாலியல் உணர்வை பாதிக்கும் என்ற ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து