முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜெனிரோ : உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் அபிஷேக் வர்மா தங்கம் தங்கப் பதக்கத்தை வென்றார். பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் அபிஷேக் வர்மா நேற்று முன்தினம் நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் 244.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

மற்றொரு இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 221.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் துருக்கியைச் சேர்ந்த இஸ்மாயில் கெலஸ் 243.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

இவர்களில் அபிஷேக் வர்மாவும், சவுரப் சவுத்ரியும் உள்ளனர். 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார். அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.

இதே போல் முதல் நாளில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார். இதன்மூலம் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா மொத்தம் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து