திட்டமிட்டபடி சீன பொருட்களுக்கு இன்று முதல் கூடுதல் வரி விதிப்பு - அதிபர் டிரம்ப் உறுதி

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      உலகம்
trump 2019 06 27

வாஷிங்டன் : திட்டமிட்டப்படி இன்று முதல் சீனப்பொருட்கள் மீதான கூடுதல் வர்த்தக வரிகள் நடைமுறைப்படுத்தப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன. 3 தினங்களுக்கு முன்பு, வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டின் துணை பிரதமர் லியூ ஹீ தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது சீனா மீதான பொருளதார தடைகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிரம்ப் பதிலளிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக சீனாவுடனான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. வர்த்தகப் போர் விவகாரத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள சீனா விரும்புகிறது. ஆனாலும் திட்டமிட்டபடி நாளை(இன்று) முதல் சீனா மீது கூடுதல் வர்த்தக வரிகள் விதிக்கப்படும் என்றார்.

அமெரிக்காவின் 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு தொடர்பாக கடந்த 20-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, சீன இறக்குமதி பொருட்களுக்கான வரி விகிதம் 10-ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படும் என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து