முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது சி.இ.ஓ. கணக்கையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத டுவிட்டர் நிறுவனம் - வலைதளவாசிகள் கடும் அதிர்ச்சி

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

சான் பிரான்ஸிஸ்கோ : தனது சி.இ.ஓ. கணக்கையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத டுவிட்டர் நிறுவனத்தால், எங்கள் கணக்குகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது போன்ற கேள்விகளை எழுப்பிய டுவிட்டர் பயனாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரியான (சி.இ.ஒ.) ஜேக் டோர்சியின், டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜேக் டோர்சியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென இனவெறி கருத்துக்களும், நாசி ஜெர்மனிக்கு ஆதரவான கருத்துக்களும் பதிவிடப்பட்டன. ஜேக்டோர்சியை பின் தொடரும் லட்சக்கணக்கான வலைத்தள வாசிகளுக்கு கடும் அதிர்ச்சியை இந்த பதிவு ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் இந்த பதிவுகள் நீக்கப்பட்டு விட்டன. இது குறித்து விளக்கம் அளித்த டுவிட்டர் நிறுவனம்,

ஜேக் டோர்சியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்தது. எனினும், தனது சி.இ.ஓ. கணக்கையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத டுவிட்டர் நிறுவனத்தால், எங்கள் கணக்குகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பன போன்ற கேள்விகளை எழுப்பிய டுவிட்டர் பயனாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். இது குறித்து டுவிட்டர் நிறுவனம் அளித்த விளக்கத்தில், தங்களது சொந்த பாதுகாப்பு அமைப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை எனவும், டுவிட்டர் கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த மொபைல் எண் மூலமாக கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து