முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவேகானந்தர் நினைவு மண்டப பொன் விழா: ஜனாதிபதி இன்று தொடக்கி வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன் விழா கொண்டாட்டத்தை இன்று 2-ம் தேதி (திங்கள்கிழமை) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் தொடக்கி வைக்கிறார்.

கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு 1970-ம் ஆண்டு செப். 2-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த மண்டபத்தின் பொன் விழா கொண்டாட்டத்தை இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து  கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரத்தின் பொருளாளர் ஹனுமந்த ராவ், மூத்த ஊழியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொன் விழா கொண்டாட்டத்தை வரும் 2-ம் தேதி முதல் 2020 செப். 2-ம் தேதி வரை ஒரு வருடத்துக்கு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா நாடு முழுவதும் மக்கள் தொடர்பு நிகழ்வாக ஒரே பாரதம் - வெற்றி பாரதம் என்ற பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக விவேகானந்த கேந்திரத்தின் தேசிய நிர்வாகிகள் டெல்லியில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கின்றனர். தொடர்ந்து, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து மாநில கவர்னர்கள், முதல்வர்களையும் சந்திக்க உள்ளனர். விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா கொண்டாட்ட நிகழ்வை இன்று ஜனாதிபதி தொடக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொன்விழா நிகழ்ச்சிகள் ஓராண்டுக்கு நடைபெறும். அப்போது, விவேகானந்தர் நினைவு மண்டப வரலாறு, உருவான விதம் உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ள கையேடுகள் முக்கிய சுற்றுலா பகுதிகளில் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து