முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது - சனிக்கிழமை நிலவில் தரையிறங்கும்

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் நேற்று பிற்பகல் வெற்றிகரமாக பிரிந்தது. 

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி சந்திரயான்-2 என்ற விண்கலத்தை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பினார்கள்.3840 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 முதலில் புவி சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்தது. பிறகு கடந்த மாதம் 14-ந் தேதி சந்திரயான்-2 சுற்றுப்பாதையை மாற்றும் பணி தொடங்கியது. 6 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 20-ந்தேதி அது நிலவின் நீள் வட்ட சுற்றுப் பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து நிலவின் நீள் வட்டப்பாதையை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நீள் வட்ட சுற்றுப் பாதையின் தூரம் குறைக்கப்பட்டால் தான் சந்திரயான்-2 விண்கலத்தால் நிலவை நெருங்க முடியும். மொத்தம் 5 தடவை நீள்வட்ட சுற்றுப்பாதை குறைப்புக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.அதன்படி கடந்த மாத இறுதியில் இருந்து படிப்படியாக 4 தடவை சந்திரயான்-2ன் சுற்றுப்பாதை அளவு குறைக்கப்பட்டது. நேற்று மாலை 6.21 மணிக்கு 5-வது முறையாக இறுதிக்கட்டமாக நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதை குறைப்பு நிகழ்வு நடந்தது.

சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள என்ஜினை 52 வினாடிகள் இயக்கி அதை நிலா அருகில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நகர்த்தினார்கள். நீள்வட்ட பாதை குறைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடந்தது.இதன்மூலம் சந்திரயான்-2 விண்கலம் நேற்று நிலா அருகில் சென்றுள்ளது. தற்போது சந்திரயான்-2 விண்கலம், நிலவின் பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 127 கி.மீ. தொலைவிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.அடுத்தக்கட்டமாக சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டரை பிரிக்கும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தரைதளத்தில் இருந்து கொண்டே சந்திரயானில் இருந்து லேண்டரை பிரித்தனர். மதியம் 12.45 மணி முதல் 1.45 மணி வரை இந்த பணி நடந்தது.லேண்டரை பிரிக்கும் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். தற்போது லேண்டர் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அது மிகவும் நல்ல நிலையில் உள்ளதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து