முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார இழப்பை சரி செய்ய திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்-பிரியங்கா காந்தி

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி இந்திய பொருளாதார நிலை குறித்து பாரதீய ஜனதா அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் பலதரப்புகளில் பாரதீய ஜனதா அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி இந்திய பொருளாதார நிலை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பிரியங்கா காந்தி  கூறியிருப்பதாவது:-

“ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது, எனவே பாரதீய ஜனதா அரசு தனது ஆட்சியில் இந்தியாவில் வரலாறு காணாத மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்று கொள்ளவேண்டும். மேலும், பொருளாதார இழப்பை சரி செய்ய திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டின் பொருளாதார மந்தநிலையை அனைவரும் தங்கள் கண் முன்னே காணும் போது, பாரதீய ஜனதாவால் எவ்வளவு காலத்திற்கு தலைப்பு செய்திகளை பயன்படுத்தி தப்பிக்க இயலும் ?  என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 2 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து