முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாஸ் ஏஞ்சல்ஸில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கழிவுநீர் மறுசுழற்சி நிலையத்தை பார்வையிட்டார்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிசாமி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கழிவு நீர் மறுசுழற்சி நிலையத்தைப் பார்வையிட்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமி கடந்த 6-ம் தேதி சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை அடைந்த பொழுது, விமான நிலையத்தில், அமெரிக்கவாழ் தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ், அனாஹெய்ம் நகரிலுள்ள கழிவு நீர் மறுசுழற்சி நிலையத்தைப் பார்வையிட்டார். அந்நிறுவனத்தினர் கழிவுநீரை மறுசுழற்சி மூலம் சுத்தமாக்கி மீண்டும் அதனைப் பயன்படுத்தும் முறை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கினார்கள்.

இந்நிகழ்வின் போது, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் க. சண்முகம் தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், கால்நடைபராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தோஷ்பாபு, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் முனைவர் எஸ்.விஜயகுமார், முதலமைச்சரின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து