முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்கள் ரயில் டிக்கெட்டுகளை இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வெளியூர் செல்பவர்கள் ரயில் டிக்கெட்டுகளை இன்று முதல் முன்பதிவு செய்யலாம். பண்டிகை நாட்களுக்கு முன் கூட்டியே முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ஏற்கெனவே முடிந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது.  ஜன.10-ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக ஜனவரி 19-ம் தேதி வரை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

தினமும் காலை 8 மணிமுதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்தினர்களுடன் கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளவும். தேதிகள் வாரியாக எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தேதிக்கு முன்பதிவு செய்யலாம் என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 10-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 12-ம் தேதியும், ஜனவரி 11-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 13-ம் தேதியும், ஜனவரி 12-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 14-ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 15-ம் தேதியும், ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 16-ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி விட்டு மீண்டும் ஊர் திரும்புவோர்கள் ஜனவரி 19-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 21-ம் தேதியும், ஜனவரி 20-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 22-ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து