முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி 21-ம் தேதி அமெரிக்கா பயணம்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பிரதமர் மோடி வருகிற 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மோடி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஐ.நா. பொதுச்சபையில் முதல் முறையாக உரையாற்ற உள்ளார்.

பிரதமர் மோடி 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு மாலத்தீவு, இலங்கை, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக மோடி அமெரிக்காவுக்கு வருகிற 21-ம் தேதி செல்கிறார். 27-ம் தேதி வரை 7 நாட்கள் அரசு முறை பயணமாக செல்லும் மோடி நியூயார்க் நகரில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசுகிறார். 22-ம் தேதி ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று பேசுகிறார். இதில் கலந்து கொள்ள 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். 23-ம் தேதி நியூயார்க் நகருக்கு செல்லும் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 27-ம் தேதி காலை ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுகிறார்.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:-

பிரதமர் மோடி 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மோடி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஐ.நா. பொதுச்சபையில் முதல் முறையாக உரையாற்ற உள்ளார்.  மோடி உரையை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் உரையாற்றுகிறார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ஐ.நா. தலைமையகத்தில் உள்ள பொருளாதார, சமூக கவுன்சில் அரங்கில் தலைமை பண்பு விவகாரங்கள், சமகால உலகுக்கும் தேவையானவர் காந்தி என்ற தலைப்பில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஹூஸ்டனில் இந்திய சமூகத்தினரின் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து