முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘அம்மா’ படப்பிடிப்பு தளம் அமைக்க முதல்வர் எடப்பாடி ரூ.1 கோடி உதவி

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் ‘‘புரட்சித் தலைவி அம்மா” படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் 26.8.2018 அன்று நடைபெற்ற திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களது கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் புரட்சித்தலைவி அம்மா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஆ. கார்த்திக், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.வி.உதயகுமார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து