பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை எந்த நாடும் ஏற்றுக் கொள்ள தயாரில்லை: ஜார்கண்டில் அமித்ஷா பேச்சு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      இந்தியா
amit shah 2019 02 02

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு அதன் இடத்தை பிரதமர் மோடி காட்டியுள்ளார் என்றும், பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை எந்த நாடும் ஏற்றுக் கொள்ள தயாரில்லை என்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பேசினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பா.ஜ.க. சார்பில் பிரச்சார யாத்திரையை அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக ஜமத்ராவில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் அம்மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இன்று மாறியுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை. இதன் மூலம் தான் பாகிஸ்தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை பிரதமர் மோடி காட்டியுள்ளார். இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் அனைத்தும் ஆதரிக்கின்றன. பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை எந்த நாடும் ஏற்றுக் கொள்ள தயாரில்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும். அரியானா, மகராஷ்டிரா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு வரும் போது இதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து