எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் -திமுக தலைவர் ஸ்டாலின் உதய நிதி மகனை வைத்து சிறுவர் அணி ஒன்றை ஆரம்பிக்கலாம் என கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா விசுவநாதன் கடுமையாக தாக்கி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்த நாள் பொதுகூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா விசுவநாதன் சிறப்புரை ஆற்றுகையில்
அதிமுக எப்போதும் இருமொழி கொள்கையை மட்டுமே பின்பிற்றும்.,பாஜகவுடன் அரசியல் கூட்டணி மட்டுமே ,கொள்கை கூட்டணி கிடையாது.
ஸ்டாலின் அரசியல் செய்ய எதுவும் கிடைக்காத தால் குடுகுடுப்பகாரனை போல இப்போ ,அப்போ ஆட்சி கவிழ்ந்து விடும் நான் தான் அடுத்த முதல்வர் என்றும் கனவு கண்டு வருகிறார்.
ஸ்டாலினிக்கு முதல்வர் ஆகும் ராசி இல்லைன்னு அவங்க கட்சி காரங்களே பேசி வருகிறார்கள். ,அதனால் தான் உதயநிதியை இளைஞர் அணி தலைவராக கொண்டு வந்துள்ளார்.
அடுத்த பத்து அல்லது இருபது வருடங்களில் உதயநிதியை முதல்வர் ஆக்கிவிடலாம் என்ற கனவுடன் இருக்கிறார்.
திமுகவில் உள்ள மூத்த தலைவரிடம் விமானத்தில் பேசி கொண்டு வந்தேன் அப்போது அவர் சொன்னார், கருணாநிதி மறைவிற்கு பிறகு ஸ்டாலின் திமுக தலைவர் ஆகி விட்டார், உதயநிதியை இளைஞர் அணி தலைவராகி விட்டார் , உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை என்று ஆதங்கத்துடன் என்னிடம் கூறினார். உதயநிதி மகனை வைத்து சிறுவர் அணி ஆரம்பித்தாலும் ஆச்சர்யம் இல்லை.
திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் தலைமை பண்பு இல்லதவராக மூன்றாம் தர நான்காம் தர பேச்சாளராக இருக்கும் வரை திமுக உருப்படாது.
இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஆர். வி. என். கண்ணன், திண்டுக்கல் மாவட்ட ஆவின் தலைவர் ஏ.டி செல்லசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பு ரத்தினம், நகர செயலாளர் முருகானந்தம்,ஒன்றிய செயலாளர் முத்துசாமி,மாணவரனி செயலாளர் அன்வர்தீன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |