பெல்ஜியம் சுற்றுப் பயணம்: இந்திய ஹாக்கி அணி கேப்டனாக மான்ப்ரீத் சிங் நியமனம்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      விளையாட்டு
SPORTS-4

Source: provided

புதுடெல்லி : பெல்ஜியம் சுற்றுப் பயணத்திற்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ருபிந்தர்பால் சிங், லலித் உபத்யாய் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய ஹாக்கி அணி பெல்ஜியம் சென்று ஐந்து போட்டிகளில் விளையாடுகிறது. பெல்ஜியம் அணிக்கெதிராக மூன்று போட்டிகளிலும், ஸ்பெயின் அணிக்கெதிராக இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது.

வரும் 26-ம் தேதி முதல் அக்டோபர் 3- ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ருபிந்தர்பால் சிங், லலித் உபத்யாய் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மான்ப்ரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து