இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      உலகம்
Military Orchestra indian national antham 2019 09 23

வாஷிங்டன் : வாஷிங்டனில் நடந்த கூட்டு ராணுவ பயிற்சியின்போது இந்திய தேசிய கீதத்தை அமெரிக்க ராணுவ இசைக்குழு வீரர்கள் இசைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது

இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. லூயிஸ் மெக்கோர்ட் ராணுவ தளத்தில் இரு நாட்டு வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி கடந்த 18ஆம் தேதியோடு நிறைவுபெற்றது.

இதற்கிடையே பயிற்சியின்போது, அமெரிக்க ராணுவத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த வீரர்கள், இந்திய தேசிய கீதத்தை இசைத்து பெருமைப்படுத்தினர். இது இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதேபோல் ‘பட்லுராம் கா படான்’ என்ற பாடலுக்கு இருநாட்டு வீரர்களும் இணைந்து பாடியபடி நடனம் ஆடிய வீடியோ கடந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து