முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்; அமைச்சர் ஜெயக்குமார்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

நாங்குநேரி : 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார் நாங்குநேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்குநேரியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் என கூறினார். தொடர்ந்து அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், சூழ்நிலைக்கேற்ப கூட்டணி முடிவு செய்யப்படும். கூட்டணியை கட்சியே முடிவு செய்யும்.  கடந்த 1972-ம் ஆண்டில் இருந்து எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் எங்களுடைய கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.  அவர்களது முகம் எங்களுடைய வெற்றிக்கு உதவிடும்.  ஆண்ட கட்சி, ஆள போகிற கட்சி என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வே உள்ளது.  காங்கிரஸ் கட்சியானது தி.மு.க. மீது சவாரி செய்யும் கட்சி ஆகும்.  சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.  தி.மு.க. வீழ்ந்து கொண்டிருக்கிறது.  அ.தி.மு.க. வளர்கிறது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து