முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்காவில் துணி நிறுவன விளம்பர பலகையில் அதிபர் டிரம்பை பெண் ஒருவர் மிதிப்பது போன்ற புகைப்படம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் துணி நிறுவனம் ஒன்று தனது கடை முன்பு விளம்பர பலகை வைத்துள்ளது.  அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவத்தினையொத்த ஒருவரை தரையில் கிடத்தி, தடகள போட்டிக்கான உடை அணிந்த பெண் ஒருவர் அவரது முகத்தின் மீது காலால் மிதித்தபடி உள்ளார். பின்பு மற்றொரு கையில் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற கயிறுகளால் அவரை கட்டி போட்டபடியும் உள்ளார். இந்த விளம்பர பலகை வைக்கப்பட்டு இருப்பது பற்றி அந்நாட்டின் ஊடகம் மீது டிரம்பின் மகனான ஜூனியர் டிரம்ப் சாடியுள்ளார்.  இது பற்றிய அவருடைய டுவிட்டர் பதிவில், நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிரபல ஊடகங்களே!.  உங்களுக்கு முட்டாள்தன மற்றும் சுவாரசியமில்லாத மீம்களை வெளியிடுவதற்கு நேரமுள்ளது. டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டு உள்ள இந்த விளம்பர பலகை பற்றிய செய்தியை ஊடகங்களில் வெளியிடுவதற்கும் நேரம் ஒதுக்கும்படி உங்களிடம் கூறி கொள்கிறேன்.  அப்படி இல்லையெனில் நீங்கள் அனைவரும் வீணர்களே என ஆவேசமுடன் தெரிவித்து உள்ளார். இந்த பலகையில் இடம் பெற்று உள்ள பெண் மாடல் மிச்சல் மெசா என்றும் அவர் பள்ளிக்கூடமொன்றின் ஆசிரியர் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து