முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: பிரதமர் மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் திரண்டு அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மாவின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தில் காந்திஜிக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு கலாச்சார வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டார்.

காந்தியின் 150 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக, டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவுக்காக, திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எட்டு முன்னணி திரை நட்சத்திரங்களை சிறப்பு அஞ்சலிக்காக அழைத்து வந்தார். இந்த நிகழ்ச்சி பிரதமர் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. பாலிவுட் பிரமுகர்கள் பங்கேற்ற மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டுவிழா கூட்டத்தில், சோனம், கங்கனா, ஹிரானி, திரைப்பட இயக்குநர்கள் ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர், போனி கபூர் மற்றும் ஜெயந்திலால்கடா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சி குறித்து டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் தன்னுடன் பாலிவுட் நட்சரத்திரங்கள் சேர்ந்து நிற்கும் படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த திரைப்பட சகோதரத்துவம் ஒன்று திரள்கிறது. காந்தி ஜியின் செய்தியை தொலைதூரத்திலும் பரவலாகவும் வேகமாக கொண்டு செல்வதை இது உறுதி செய்யும். இது மக்களை பாபுவின் (காந்தியின்) மீது அன்பு செலுத்த ஊக்குவிக்கும். பாலிவுட்டின் முன்னணி திரைப்பட பிரமுகர்கள் மற்றும் முக்கிய கலாச்சார முகங்களுடனான சந்திப்பு பலனளித்தது. மகாத்மா காந்தியின் எண்ணங்களை சினிமா மூலம் பரப்புவது, காந்திஜியின் கொள்கைகளை இளைஞர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது போன்ற பரந்த அளவிலான பொருள்களில் நாங்கள் எண்ணங்களை பரிமாறிக் கொண்டோம். நமது திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு தொழில் மாறுபட்டது மற்றும் துடிப்பானது. சர்வதேச அளவில் அதன் தாக்கமும் மகத்தானது. நமது திரைப்படங்கள், இசை மற்றும் நடனம் மக்களையும் சமூகங்களையும் இணைக்கும் மிகச் சிறந்த வழிகளாக மாறி விட்டன. இவ்வாறு பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து