முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சைக்குரிய பேச்சால் கெஜ்ரிவால் மீது பீகார் கோர்ட்டில் வழக்கு

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

ஹாஜிபூர் : சர்ச்சைக்குரிய பேச்சால் கெஜ்ரிவால் மீது பீகார் கோர்ட்டில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.  

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நிகழ்ச்சியில் தனது அரசு சுகாதாரத்துறையை மேம்படுத்த எடுத்துவரும் முயற்சிகள் குறித்து பேசும்போது, ‘பீகாரில் இருந்து மக்கள் 500 ரூபாய் செலவழித்து டிக்கெட் எடுத்து டெல்லிக்கு வந்து ரூ.5 லட்சம் அளவுக்கு இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்கிறார்கள்’ என்று கூறியிருந்தார். 

அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் ஹாஜிபூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சமூக ஆர்வலர் நிதிஷ்குமார் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘கெஜ்ரிவாலின் பொறுப்பற்ற பேச்சு என்னை காயப்படுத்திவிட்டது. அவர் நாட்டின் ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றுக்கு அவமதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார். பிறந்த இடம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு விதமான குழுக்கள் இடையே விரோதத்தை உருவாக்க முயற்சிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் மீது ஏற்கனவே இதேபோல முசாபர்பூர் கோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து