பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, காஷ்யப் தோல்வி

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      விளையாட்டு
French Open Badminton 2019 10 23

மும்பை : பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரர்காளன ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, காஷ்யப் ஆகியோர் தொடரின் தொடக்கத்திலேயே வெளியேறினர்.

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் இந்தியா சார்பில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்டவர்கள் தொடக்கத்திலேயே ஏமாற்றம் அளித்தனர். ஸ்ரீகாந்த் கிடாம்பி உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சோயு தியென் சென்-ஐ எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த்  21-15, 7-21, 14-21 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். சென்னுக்கு எதிராக ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக நான்கு முறை தோல்விகளை சந்தித்துள்ளார். மற்றொரு ஆட்டத்தில் சமீர் வர்மா கென்ட்டா நிஷிமோட்டோவை எதிர்கொண்டார். இதில் 22-20, 18-21, 18-21 என தோல்வியடைந்தார். காஷ்யப் லாங் அங்குஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் காஷ்யப் 11-21, 9-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து