முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

U-19 உலகக்கோப்பை அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்காவில் நடக்கிறது

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை நடத்தி வருகிறது. அடுத்த வருடம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்தத் தொடர் தென்ஆப்பிரிக்காவில் ஜனவரி 17-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஜப்பான் அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நைஜீரியா அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘சி’ பிரிவில் பாகிஸ்தான் வங்காளதேசம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கனடா அணிகள் இடம் பிடித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து