இந்தியா - வங்க தேச அணிகள் மோதும் 9-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிடெல்லியில் இன்று நடக்கிறது

சனிக்கிழமை, 2 நவம்பர் 2019      விளையாட்டு
india-bangladesh twenty over match 2019 11 02

புது டெல்லி : டெல்லியில் இன்று நடக்வுள்ள முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு 9-வது ஆட்டமாகும்.

இரு அணிகளும் 20 ஓவரில் இன்று மோதுவது 9-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 8 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக கடந்த மார்ச் மாதம் கொழும்பில் நடந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்று இருந்தது. இந்திய அணி அதிக பட்சமாக 180 ரன் குவித்து இருந்தது. வங்காளதேசம் 166 ரன்எடுத்து இருந்தது. ரோகித்சர்மா 8 ஆட்டத்தில் 356 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.  இதில் 4 அரை சதம் அடங்கும் தவான் 236 ரன் எடுத்து உள்ளார். வங்காளதேச வீரர்களில் சபீர் ரகுமான் 236 ரன்னும் (6 ஆட்டம்), முஷ்பிகுர் ரகீம் 165 ரன்னும் எடுத்து உள்ளனர்.வங்காளதேச வீரர்கள் ரூபல் உசேன், அல்அமின் தலா 7 விக்கெட்டும், அஸ்வின் 6 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து