திருப்பதியில் 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்பயாகம்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2019      ஆன்மிகம்
tirupathi elumalaiyan pushpayagam 2019 11 04

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்பயாகம் நடைபெற்றது. இதில் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. இதையடுத்து கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் ஏழுமலையானுக்கு புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து 7 டன் மல்லி, முல்லை, ரோஜா, சாமந்தி உள்ளிட்ட மலர்கள் கொண்டு வரப்பட்டன. இந்த மலர்கள் பாபவிநாசம் வனத்தில் வைக்கப்பட்டு காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மேள தாளம் முழங்க ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இதில் திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி மற்றும் உறுப்பினர்கள், அர்ச்சகர்கள், உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து