Idhayam Matrimony

தமிழ் மொழியை உயிரெனக் காப்போம்: மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளில் விஜய் பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026      தமிழகம்
Vijay-2-2026-01-25

சென்னை, ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம் என்று மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விஜய் தெரிவித்துள்ளார். மேலும் த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார். மேடைக்கு வந்த விஜய்க்கு விசில் அடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு செயல் வீரர்கள் கூட்டத்தில் மேடையில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் த.வெ.க. கொள்கைத் தலைவர்களின் படங்களுக்கும் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம். ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வெல்க தமிழ்!" என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து