முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்க ரூ.2 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வனத்துறை அமைச்சர் கடல் வாழ் உயிரினங்களான ஆலிவ்ரிட்லிஸ் மற்றும் கடல் பசு ஆகியவை எண்ணிக்கையில் குறைந்து வருவதால்

பொது மக்களிடையே கடல் ஆமை மற்றும் கடல் பசுக்களைப் பாதுகாப்பது குறித்து எடுத்துரைப்பதையும் மற்றும் உள்ளூர் மக்களுக்கு சூழல் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில்,கோடியக்கரை வனச் சரணாயத்தின் அருகில் பொருத்தமான இடத்தில் கடல் ஆமைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தரம் வாய்ந்த முப்பரிமாண அருங்காட்சியத்துடன் சூரியசக்தி மூலம் கிடைக்கப்பெறும் மின்சாரத்தைப் பயன்படுத்தி நவீன வசதிகளுடன் கூடிய கடல் ஆமை பாதுகாப்பு மையம் 2019-20 ஆம் ஆண்டு,2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். வனத்துறையின் பங்களிப்புடன் சூழல் சுற்றுலா மேலாண்மைக் குழுவால் இம்மையம் நிர்வகிகப்படும் என்று அறிவித்தார். இதனை செயல்படுத்தும் தமிழக அரசு இதற்கு தேவையான வழிமுறைகளுடன் அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து