முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தி தலைமையில் வரும் 10-ம் தேதி காங். செயற்குழு கூட்டம்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி நடைபெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பாராளுமன்றத்தின் இருஅவை செயலர்களுக்கும், பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது. இதில் பொருளாதார மந்த நிலையை சரிசெய்வதற்காக, கடந்த 1961-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்து  மத்திய அரசு கடந்த மாதம்  அவசர சட்டம் இயற்றியது.

அதன்படி, பெருநிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது. மேலும், அதே மாதத்தில் இ-சிகரெட்டுகள் உள்ளிட்டவை விற்பனை மற்றும் சேமிப்புக்கு தடை விதித்து அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த இரு அவசர சட்டங்களுக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதார மந்தநிலை, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், வேளாண் பொருட்களுக்கு குறைவான விலை, வேலை வாய்ப்பின்மை போன்ற விவகாரங்களை எழுப்பி பொது போராட்டத்தில் ஈடுபடுவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இவற்றில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் என்பது ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 6 நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் ஆகும். எனினும் இதில் சேர இந்தியா மறுப்பு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவின் செல்போனில் வாட்ஸ்-அப் செயலிக்குள் சட்ட விரோதமாக புகுந்து உளவு பார்த்துள்ளனர் என்றும் ஒட்டுக்கேட்டுள்ளனர் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலே டெல்லியில் செய்தியாளர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன் கூறினார்.  இந்த விவகாரம் பற்றி எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொள்வோம் என்றும், வருங்காலத்தில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யப்படும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார். இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.  டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் குளிர்கால கூட்ட தொடர், பிரியங்கா வாட்ஸ்அப் செயலி வழியே உளவு வேலையில் ஈடுபட்ட விவகாரம் போன்றவை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து