எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா-ஓசியானா குரூப் 1 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த செப்டம்பர் 14, 15-ம் தேதிகளில் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் அங்கு சென்று விளையாட முடியாது என்று இந்திய டென்னிஸ் அணியின் விளையாடாத கேப்டன் மகேஷ்பூபதி, ரோகன் போபண்ணா உள்ளிட்ட சில வீரர்கள் அறிவித்தனர். அத்துடன் இந்த போட்டியை பொதுவான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான உறவு சுமுகமாக இல்லாததால் இந்த போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு, அகில இந்திய டென்னிஸ் சங்கமும் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த போட்டி வருகிற 29, 30-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடம் மாற்றம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாதுகாப்பு கருதி பொதுவான இடத்துக்கு மாற்றப்படுவதாக கடந்த திங்கட்கிழமை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்தது. ஆனால் நடைபெறும் இடம் எது? என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தானுக்கு எதிரான டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணிக்கு விளையாடாத கேப்டனாக செல்ல மகேஷ்பூபதி மறுத்ததால் அவருக்கு பதிலாக ரோகித் ராஜ்பால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது.
இதனால் அதிருப்திக் குள்ளாகி இருக்கும் இந்திய அணியின் விளையாடாத கேப்டன் (களம் இறங்காமல் அணியை வழி நடத்துபவர்) மகேஷ்பூபதி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை நான் பெரிதாக நினைக்கவில்லை. புதிய கேப்டனுக்கான தருணம் இது என்று அவர்கள் சொல்ல முடியும். ஆனால் நான் தேசிய அணிக்காக பணி செய்ய மறுத்தேன் என்று யாரும் சொல்ல முடியாது. தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது பாதுகாப்பு இல்லாதது என்று நான் உண்மையாகவே நினைத்தேன். அதனை தான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனமும் உறுதி செய்து இருக்கிறது.
இனிமேல் நான் கேப்டனாக இல்லை என்று அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் இருந்து எழுத்துபூர்வமான தகவலை நான் எதிர்பார்க்கிறேன். இஸ்லாமாபாத் செல்லும் இந்திய டென்னிஸ் அணிக்கு ரோகித் கேப்டனாக இருப்பார் என்பது மட்டுமே நான் கேள்விப்பட்டேன். போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த தகவல் வெளியானது. கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டு இருப்பதாக எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
12 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருப்பதுடன், நாட்டுக்காக 25 ஆண்டுகளாக விளையாடி இருக்கும் நான் அத்துடன் இந்த ஆட்டத்தை விட்டு ஒதுங்கி இருந்து விடவில்லை. இந்திய டென்னிஸ் முன்னேற்றத்துக்காக தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டி வருகிறேன். இளம் வீரர்களின் வளர்ச்சிக்காக நிதி திரட்டி கொடுத்துள்ளேன். அகில இந்திய டென்னிஸ் சங்கம் நான் வேண்டாம் என்று விரும்பினால் ஒதுங்குவதற்கு தயார். ஆனால் நான் நாட்டு அணிக்காக பணியாற்ற மறுக்கிறேன் என்று சொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒருபோதும் நான் சொன்னது கிடையாது.
பாகிஸ்தானுக்கு செல்வது சவுகரியமாக இருக்காது என்று சொன்னேனே தவிர, இந்த போட்டிக்கு பணியாற்ற தயாராக இல்லை என்று சொல்லவில்லை. டென்னிசுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள என் மீது தேவையில்லாமல் சேற்றை வாரி இறைக்க வேண்டாம். எனது தூண்டுதலில் பேரில் தான் மற்ற வீரர்களும் பாகிஸ்தான் செல்ல மறுத்ததாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் கருதி தான் என் மீது இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மகேஷ்பூபதி விவகாரம் குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜி கருத்து தெரிவிக்கையில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ராஜ்பால் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது. மகேஷ்பூபதியுடனான ஒப்பந்தம் கடந்த ஆண்டு முடிந்து விட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தன்னால் பங்கேற்க முடியாது என்று அவரே சொல்லி விட்டார். எனவே தான் அவருக்கு பதிலாக புதிய கேப்டனை தேர்வு செய்தோம்’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
27 Oct 2025கோலாலம்பூர் : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்தார்.
-
2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க
-
ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்
27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார்.
-
5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடக்கம்
27 Oct 2025கொல்கத்தா : 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடங்கியது.
-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
27 Oct 2025சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆப்கான் எல்லையில் மோதல்: 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி
27 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல் சம்பவத்தில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
-
எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும்: பேச்சாளர்களுக்கு அமைச்சர் அறிவுரை
27 Oct 2025மதுரை : பேச்சாளர்கள் தங்களது பேச்சு மீளாய்வு செய்யப்படும் என்ற எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும், ’’ என்று உலகத்தமிழ் சங்க விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவி
-
அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை
-
தெருநாய் விவகாரம்: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாத 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
27 Oct 2025புதுடெல்லி : தெருநாய் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் வரும் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத
-
லித்துவேனியாவில் விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்களால் விமான சேவை நிறுத்தம்
27 Oct 2025வில்னியஸ் : லித்துவேனியாவில் விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்களால் விமான சேவை நிறுத்தப்பட்டது.
-
மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்: சாலையில் கிடந்த ரூ.17 லட்சம் பணத்தை காவல் துறையிடம் ஒப்படைத்த பெண்
27 Oct 2025மதுரை : மதுரையில் சாலையில் சாக்கு மூட்டையில் கிடந்த ரூ.17 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
சென்னை: 4.9 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு: மாநகராட்சி தகவல்
27 Oct 2025சென்னை : சென்னை: 4.9 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் ஒரே அங்கீகாரம் : * பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை : பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் ஒரே அங்கீகாரம் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைக
-
புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயார்: துணை முதல்வர் உதயநிதி
27 Oct 2025சென்னை : எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.


