Idhayam Matrimony

வாகன விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 9 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க  முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம்,  சொக்கம்பட்டி கிராமம், கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், புளியங்குடி நோக்கி  சென்று கொண்டிருந்த காவல் வாகனத்தின் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து, திரிகூடபுரம்  பேருந்து நிறுத்தம் அருகில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில், திரிகோடபுரத்தைச் சேர்ந்த  மைதீன் பிச்சை என்பவரின் மனைவி ஆயிஷாபானு என்கிற மல்லிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து  நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்த ஆயிஷாபானு என்கிற மல்லிகாவின் குடும்பத்திற்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் மூன்று நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிருவாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஆயிஷாபானு என்கிற மல்லிகாவின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து