எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாங்காங் : ஹாங்காங்கில் நேற்று காலை நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும், கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் போராட்டத்தின் போது காயமடைந்த சவுஸ்லாக் என்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை போராட்டக்காரர்கள் சை வான் ஹோ பகுதியை முற்றுகையிட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து காவலர் ஒருவர் முகமூடி அணிந்த நபர் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அந்நபரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்த காவலர் மூன்று முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஹாங்காங் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


