இந்தியா - வங்காள தேசத்திற்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      விளையாட்டு
ind-vs-ban 2019 11 12

கொல்கத்தா : கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்குப் பிறகு பனிப்பொழிவு இருக்கும் என்பதால் முன்னதாகவே போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக ‘பிங்க்’ பந்தில் நடக்கிறது. பொதுவாக இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இரவு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் பனியில் பந்து ஈரமாகிவிட்டால், பந்து வீச்சாளர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். பொதுவாக பகல்-இரவு போட்டி மதியம் 2 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நடைபெறும். கொல்கத்தாவில் இரவு 8 மணிக்கு மேல் பனிப்பொழிவு தாக்கம் அதிகமாக இருக்கு என்பதால் போட்டியை ஒரு மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கம் பி.சி.சி.ஐ.-க்கு வேண்டுகோள் விடுத்தது. இதை பி.சி.சி.ஐ. ஏற்றுக் கொண்டதால் கொல்கத்தா டெஸ்ட் போட்டி நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியின் முதல் செசன் மதியம் ஒரு மணிக்கு தொடங்கி 3 மணிவரை நடக்கும். பின்னர் 40 நிமிட இடைவேளைக்குப் பிறகு 3.40 மணிக்கு தொடங்கி 5.40 வரை நடக்கும். அதன்பின் 20 நிமிட இடைவேளைக்குப்பின் 6 மணிக்கு தொடங்கி 8 மணி வரை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து