ஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர்: வங்காளதேச அணி கேப்டன் சொல்கிறார்

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      விளையாட்டு
SPORTS-6 2019 11 13

Source: provided

இந்தூர் : ஷாகிப் அல் ஹசன் இல்லாதது இரண்டு வீரர்களை இழந்ததற்கு சமம் என வங்காளதேச அணி கேப்டன் மொமினுல் ஹக்யூ தெரிவித்துள்ளார்.
 
இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது. வங்காளதேச அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் கிடையாது. இருவரும் அணியில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஷாகிப் ஹசன் இல்லாததால் மொமினுல் ஹக்யூ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று தொடங்க உள்ள முதல் டெஸ்ட் குறித்து மொமினுல் ஹக்யூ கூறுகையில் ‘‘மூன்று வீரர்களை இழப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர். அவர் இல்லாதது சவாலானதாக இருக்கும். இருந்தாலும், அதைப்பற்றி மிகப்பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை’’ என்றார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து