டெல்லியில் காற்று மாசு: பள்ளிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2019      இந்தியா
delhi pollution 2019 11 14

புது டெல்லி : காற்று மாசு அதிகமானதால் டெல்லியில் பள்ளிகளுக்கு மேலும் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு பாதிப்பால் தலைநகர் வாழ் மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. எல்லா தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்திக் கொண்டிருக்கின்றன. தலைநகர் டெல்லியில் கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் காற்று மாசு அதிகமானதால் பள்ளிகளுக்கு மேலும் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்தது டெல்லி அரசு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து