முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரகுரு எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.வும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான இரா. குமரகுருவின் மகள் இலக்கியா, மணமகன் ராம்பிரசாத் ஆகியோரது திருமண வரவேற்பு விழா உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது,

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து, தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டமாக உதயமாகியிருக்கின்றது. இந்த மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு, இந்த இயக்கத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். அம்மா இருக்கின்ற காலகட்டத்திலே மாவட்ட செயலாளராக இருந்து பணியாற்றி 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார். இந்த இயக்கம் ஆளுங்கட்சியாக இருந்த போதும், எதிர்க்கட்சியாக இருந்த போதும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து  மக்களுக்கு சேவை செய்து மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றி  மக்களுடைய நன்மதிப்பை பெற்றவர் குமரகுரு. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சட்டத்துறை அமைச்சரோடு இணைந்து குமரகுரு சுற்றுப்பயணம் செய்து  விழுப்புரம் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்று சொல்லுகின்ற அளவிற்கு  அவர் பணியாற்றி கொண்டிருக்கின்றார். அவ்வாறு சிறப்பான முறையிலே பணியாற்றக்கூடிய, சட்டப்பேரவை உறுப்பினருடைய இல்லத் திருமண விழாவிலே நான் கலந்து கொண்டதிலே மட்டற்ற மகிழ்ச்சி. இங்கு வந்திருக்கின்ற அனைவரின் வாழ்த்துக்களோடு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த திருமண வரவேற்பு விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம்,  முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் மற்றும்  தலைமைக் கழக நிர்வாகிகளே, மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து