முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 ஆண்டுகளில் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கான விமான செலவு ரூ.255 கோடி

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்துக்கான விமான செலவு மட்டும் ரூ.255 கோடி என்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவு விவகாரத் துறை இணை அமைச்சர் முரளிதரன்  தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், விமானச் செலவாக 2016-17ம் ஆண்டில் ரூ.76.27 கோடியும், 2017-18ம் ஆண்டில் ரூ.99.32 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2018 - 19ம் ஆண்டில் ரூ.79.91 கோடியும் செலவிடப்பட்டிருப்பதாகவும், 2019 - 20ம் ஆண்டுக்கான விமானக் கட்டணத் தொகை இன்னும் தெரியவரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் பயணங்கள் அனைத்தையும் இந்திய விமானப் படை விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் கட்டணமின்றி மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து