முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் எஸ்.கே.ஜி மருத்துமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்.ஆர்.அமுதகுமாருக்கு உலக அளவில் சிறந்த மருத்துவருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது! இங்கிலாந்து பாராளுமன்றம் வழங்கியது!!

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் சிறப்புடன் செயல்பட்டு வரும் எஸ்.கே.ஜி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் டாக்டர்.ஆர்.அமுதகுமாருக்கு உலக அளவில் சிறந்த மருத்துவருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றம் வழங்கி கௌரவித்திருப்பது தமிழக மருத்துவத்துறைக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
திருமங்கலம் நகர் பேருந்து நிலையத்தின் பின்புறம் எஸ்.கே.ஜி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரியாக அதிதீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஆர்.அமுதகுமார் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் டாக்டர்.ஆர்.அமுதகுமார், மருத்துவ உலகிற்கு செய்துள்ள சேவைகளை கருத்தில் கொண்டும்,அதிதீவிர சிகிச்சை மருத்துவத்தில் பல்வேறு புதிய யுக்திகளை கண்டறிந்து நோயாளிகளை விரைவாக குணப்படுத்தியதற்காகவும் அவருக்கு இங்கிலாந்;து நாட்டின் பாராளுமன்றம் சார்பில் உலக அளவில் சிறந்த மருத்துவருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 22ம் தேதி லண்டன் மாநகரிலுள்ள இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உலக அளவில் சாதனை படைத்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிடும் நிகழ்ச்சியில் அந்நாட்டு இந்திய வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திரஷர்மா,நியா கிரிப்பித்,ஜேக்கப் ரவிபாலன் மற்றும் லண்டன் உலகத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் இணைந்து திருமங்கலம் எஸ்.கே.ஜி மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரியுமான அதிதீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஆர்.அமுதகுமாருக்கு உலக அளவில் சிறந்த மருத்துவருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்தனர்.இதனை தொடர்ந்து இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் விருதுபெற்ற டாக்டர்.ஆர்.அமுதகுமாருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
தமிழக அரசு மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர்.ஆர்.அமுதகுமார் அதிலிருந்து விலகி தற்போது திருமங்கலம் பேருந்து நிலையத்தின் பின்புறம் எஸ்.கே.ஜி மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை துவங்கி அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரியாக தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வருகிறார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தமிழக அளவில் சிறந்த மருத்துவ சேவை புரிந்ததற்காக திருமங்கலம் எஸ்.கே.ஜி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நற்சான்று விருது வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்தினால் உலக அளவில் சிறந்த மருத்துவருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழகத்தைச் சேர்ந்த அதிதீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஆர்.அமுதகுமாருக்கு வழங்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த கௌரவமாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து