முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அரசு ஒதுக்கிய வீட்டில் ஓராண்டு வரை வசிக்கலாம் -ராஜ்நாத்சிங்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

புதுடெல்லி : வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அரசு ஒதுக்கிய வீட்டில் ஓராண்டு வரை வசிக்கலாம் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.  

முப்படைகளிலும் பணியாற்றி வரும் வீரர்களின் குடும்பத்தினர் தற்போதைய விதிமுறைகளின்படி எதிரிப்படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போதோ அல்லது எதிரிகளின் வான் தாக்குதலிலோ உயிரிழக்கும் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினர் மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து அரசு குடியிருப்புகளில் வசிக்கலாம் என்ற கால அவகாசம் தற்போது ஓராண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது,

போரில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினர் அரசு குடியிருப்புகளில் தொடர்ந்து வசிப்பதற்கான கால அவகாசத்தை, தற்போதைய மூன்று மாதங்களில் இருந்து ஓராண்டாக நீட்டிக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து