முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை தமிழில் 2020-ம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 2021-ல் ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வை பல்வேறு மாநில மொழிகளில் நடத்த முடிவெடுத்திருக்கும் மத்திய அரசு, வரும் 2020-ம் ஆண்டிலேயே இம்முறையை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தமிழிலும் எழுதலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கை ஐ.ஐ.டி.யில் நுழைவுத்தேர்வை தாய்மொழியில் எழுதி பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் தேர்வில் தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் போது மாநிலம் சார்ந்த தாய்மொழிக்கு முதன்மையான இடம் கொடுத்தால் தான் அனைத்து மாநில மாணவ, மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

இந்நிலையில் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வருகின்ற 2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் பல்வேறு மாநில மாணவர்கள் அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என்று அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் வங்க மொழி, தமிழ், தெலுங்கு, அசாமி, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, கன்னடா, ஒடியா, உருது ஆகிய 11 மொழிகளில் வினாத்தாள் இடம் பெறக்கூடிய நிலை ஏற்பட்டு பல்வேறு மாநில மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இருப்பினும் 2021-ல் ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வை பல்வேறு மாநில மொழிகளில் நடத்த முடிவெடுத்திருக்கும் மத்திய அரசு வரும் 2020-ம் ஆண்டிலேயே இம்முறையை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.மேலும் மத்திய அரசு உயர்கல்விக்காக நாடு முழுவதும் பொதுவாக நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் அந்தந்த மாநில மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக மாநில மொழியில் வினாத்தாள் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து